• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்!

Bharathy by Bharathy
May 14, 2026
in இலங்கை செய்திகள்
0
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்!
Share on FacebookShare on Twitter

டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று  13 ஆம் திகதி முற்பகல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், வர்த்தக நட்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி, மீள்குடியேற்றம் மற்றும் காணி அடையாளங்காணும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலக மட்ட ரீதியாக தனித்தனியாகக் கேட்டறிந்தார் ஜனாதிபதி.

டிட்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட், நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, தலவாக்கலை, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 18,266 குடும்பங்களைச் சேர்ந்த 61,833 நபர்கள் பாதிக்கப்பட்டதுடன், இதில் தோட்டப்பகுதிகளில் 675 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,565 வீடுகளும் முழுமையாக சேதமடைந்ததுடன், தோட்டப்பகுதிகளில் 612 வீடுகளும் கிராமப்புறங்களில் 153 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. அத்துடன் 93 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இங்கு விரிவாக ஆராய்ந்தார். வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்கள், தற்போதுள்ள மழைக்காலத்துடன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 

அவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  அதற்கான காணி ஒதுக்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறும், அந்தக் காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை, அவ்விடத்திலேயே தற்காலிக வீடொன்றை விரைவாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிகப்பாரிய பேரழிவான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக அவற்றைத் வெற்றிகரமாகக் கடந்து, முதற்கட்டப் பணிகளில் கணிசமான பகுதியை முடிக்க முடிந்ததாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

இதன் உண்மையான பலன்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமாயின், இந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்றும், எனவே மீள்குடியேற்றம் உள்ளிட்ட இரண்டாம் கட்டப் பணிகளையும் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிப்பதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் நாட்டில் ஏற்படாதவாறு, நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும், அங்கு வலுவான நிதி ஒழுக்கத்துடன் முக்கியமான அளவுகோல்களின் படி செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, அதன் பலன்களை விரைவாக மக்களுக்கு வழங்க அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீரஆரச்சி, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.ஜி. விஜேரத்ன, வி.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதா, பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,

மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன் ஆகியோருடன் அமைச்சுகளின்  செயலாளர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

by Bharathy
May 14, 2026
0

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல பகுதிகளுக்கு விடுத்திருந்த மண்சரிவு எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது. பதுளை, காலி, களுத்துறை, கண்டி,...

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

by Bharathy
May 14, 2026
0

ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கருதப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். இது இலங்கையில் திருடப்பட்ட பணமா...

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

by Bharathy
May 14, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பகல் நேரத்தில் நடந்த 10 சொத்து மற்றும் தங்க நகைகள் திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரையும்...

ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

by Bharathy
May 14, 2026
0

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று 13 ஆம் திகதி மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்....

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

by Bharathy
May 14, 2026
0

கனமழை காரணமாக முன்னதாக உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

by Bharathy
May 14, 2026
0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சந்தியை அண்மித்துள்ள அளுத்கம-மத்துகம சாலை, நீரில் மூழ்கியதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (2026.05.13) அப்பகுதியில் பெய்த...

நீதித்துறைக்கு ஜனாதிபதியிடமிருந்தே அழுத்தம்! – ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்று பீரிஸ் சாடல்!

நீதித்துறைக்கு ஜனாதிபதியிடமிருந்தே அழுத்தம்! – ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்று பீரிஸ் சாடல்!

by Bharathy
May 14, 2026
0

நாட்டின் நீதித்துறையின் கௌரவம் மற்றும் சுயாதீனம் தற்போது ஜனாதிபதியினாலேயே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

இந்த அரசுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லையாம்…!

இந்த அரசுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லையாம்…!

by Bharathy
May 14, 2026
0

தான் அரசுடன் இணையப்போவதாகப் பரப்பப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தான்...

முன்னாள் அமைச்சருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு!

by Bharathy
May 14, 2026
0

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 பேருக்கு...

நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால் கோட்டாவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படுமாம் ;  அஜித் பி பெரேரா எம்.பி. கடும் எச்சரிக்கை!

நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால் கோட்டாவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படுமாம் ; அஜித் பி பெரேரா எம்.பி. கடும் எச்சரிக்கை!

by Bharathy
May 14, 2026
0

"நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் ஆதிக்கத்திலிருந்து நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதே ஜனநாயகத்தின் அடிப்படை. நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படும்" என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி