உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்த அரசுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லையாம்…!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தான் அரசுடன் இணையப்போவதாகப் பரப்பப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , “எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை. இலங்கையை ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலேயே நான் பொதுவாழ்வுக்கு வந்தேன்.

எதிரணி முகாமில் இருந்து என்னை வெளியேற்றச் சில குழுக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. தற்போதைய அரசு ஒரு தோல்வியடைந்த அரசு. இந்த அரசுக்கு எதிர்காலப் பொருளாதாரக் கண்ணோட்டம் கிடையாது.

உலகுக்குத் திறக்கப்படாத, குறுகிய மற்றும் மூடிய கருத்துக்கள் மூலம் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. அரசுடன் இணைவது குறித்து நான் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவ்வாறான ஊகங்கள் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகளை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றனர்.

எல்லாவற்றையும் எதிர்ப்பதற்குப் பதிலாக, நல்ல முடிவுகளுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை நான் ஊக்குவிக்கின்றேன். நாட்டுக்காக எந்தவொரு பாரிய பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கின்றேன். இலங்கைக்கு ஒரு புதிய யுகம் தேவை.

பொருளாதார ரீதியாகச் செழிப்பான இலங்கையை உருவாக்கும் நோக்கில், அரசுக்கு எதிரான எனது அரசியல் போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தீவிரப்படுத்தவுள்ளேன்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

68 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0