உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இரத்தினபுரி – பெல்மதுல்ல வீதியின் வெலிஹந்த பிரதேசத்தில் உள்ள இரட்டை வளைவுப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரிய வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெருமளவிலான மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற ‘பிரைம் மூவர்’ ரக வாகனம், குறித்த இரட்டை வளைவுப் பகுதியில் திரும்ப முற்பட்டபோது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரம் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தால் வாகனத்துக்கும், அதில் ஏற்றி வரப்பட்ட மதுபானத் தொகைக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை நேரம் என்பதால் வீதியில் ஏனைய வாகன நடமாட்டங்கள் குறைவாக இருந்தமையால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான வாகனத்தை வீதியிலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் போக்குவரத்துக்குச் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பெல்மதுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெலிஹந்த இரட்டை வளைவுப் பகுதி அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0