உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மஹியங்கனை – அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் ஒருபெதிவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (10) இரவு தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, மதுபோதையில் இருந்த கணவர் மனைவியையும் மகளையும் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த ஏயார் ரைஃபில் (Air Rifle) ரக துப்பாக்கியால் மனைவியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபரான கணவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைஃபில் துப்பாக்கி மற்றும் 77 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைமறைவாக உள்ள சந்தேக நபரை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0