• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

எரிந்த மருந்துக் களஞ்சியத்தை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர்!

Bharathy by Bharathy
May 9, 2026
in இலங்கை செய்திகள்
0
எரிந்த மருந்துக் களஞ்சியத்தை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர்!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார்.

அதிகாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு மாற்றியமை மற்றும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து அவர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பணிப்பாளர், வைத்தியசாலையின் உள்ளக மருந்துக் களஞ்சியத்திலிருந்தும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்தும் தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

“பெரும் சேதத்தைத் தணிப்பதற்கு நீங்கள் எடுத்த இந்த வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது” – என்று அவர் தீயணைப்பு வீரர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அத்துடன், இந்தத் தீயைக் கட்டுப்படுத்தும் கூட்டு முயற்சியில் உடனடியாகச் செயற்பட்டுச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் தனது கௌரவத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் இணைந்து செயலாற்றிய வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை ஊழியர்களுக்கும் ஆளுநர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த தீயணைப்பு வீரர்கள், படையினர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகள் வைத்தியசாலையால் முன்னெடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதன்போது ஆளுநருக்கு உறுதியளித்தார்.

Related Posts

பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

by Bharathy
May 9, 2026
0

70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான்...

காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள்  தெளிவு படுத்தல்!

காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள்  தெளிவு படுத்தல்!

by Bharathy
May 9, 2026
0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மே 09 ஆம் திகதி இன்று, காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான   செயல் அமர்வு ...

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

by Bharathy
May 9, 2026
0

இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு,...

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...

மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டு போட்டி- 2026!

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி- 2026!

by Bharathy
May 8, 2026
0

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின்...

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

by Bharathy
May 8, 2026
0

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய...

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

by Bharathy
May 8, 2026
0

அக்கரையங்குளம் காவல் எல்லைக்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் காவல் நிலையத்தில் ஹலோ...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வடிந்தோடல் சிக்கல்; விரைவில் தீர்வு காண நடவடிக்கை..!

by Bharathy
May 8, 2026
0

கரவெட்டி மத்திய பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் அமைப்பு மற்றும் வீதிப் புனரமைப்புப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாகத் NPP யின் கரவெட்டி பிரதேச சபை...

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

by Bharathy
May 8, 2026
0

மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி நகரில் நாவலப்பிட்டி கம்பளை வீதியிலும் பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில...

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வியட்நாம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி