• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!

Bharathy by Bharathy
May 8, 2026
in இலங்கை செய்திகள்
0
வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!
Share on FacebookShare on Twitter

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்களத் தலைவர்களுடனான விசேட முகாமைத்துவக் கலந்துரையாடல், ஆளுநரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் அவர்கள் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

அரச நிறுவனங்களில் தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக 180 நாள்களைப் பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதில் நீண்டகாலமாகப் பல சிக்கல்கள் நிலவி வந்தன.

அரச நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 மற்றும் 29/2019 ஆகியவற்றின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில் காணப்பட்ட இத்தடைகளை நீக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாகவே தற்போது அரச நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கையின் மூலம், நிரந்தர நியமனங்கள் வழங்குவதில் இதுவரை காலமும் காணப்பட்ட நிர்வாகத் தடைகள் முற்றாக நீங்குவதுடன், ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஆளுநர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) செ.பிரணவநாதன், புதிய சுற்றறிக்கையின் பிரதான உள்ளடக்கங்கள் குறித்தும், அதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகள் குறித்தும் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், அரச நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 இன் கீழ் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இதுவரை கிடைக்கப்பெறாத 107 ஊழியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளமை குறித்தும், அரச நிர்வாகச் சுற்றறிக்கை 29/2019 இன் கீழ் நிரந்தர நியமனம் கோரி விண்ணப்பித்த 307 ஊழியர்கள் உள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் தற்போது வரையில் சேவையில் தொடரும் ஊழியர்கள் தொடர்பான திணைக்கள ரீதியான தரவுகளையும் அவர் சபைக்குச் சமர்ப்பித்தார். இதன்போது, நியமன அதிகாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குவதில் தாங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தற்போதைய நிலைமைகளைக் கௌரவ ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த ஆளுநர், அதிகாரிகளுக்குப் திட்டவட்டமான பணிப்புரைகளை வழங்கினார்: அரச நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 இன் நியமங்களின்படி, தகைமை பெற்றுள்ள அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி வழமையான அனுமதி நடைமுறைகளினூடாக நிரந்தர நியமனங்களை இரு வாரங்களுக்குள் விரைவாக வழங்க வேண்டும்.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் அனுமதி பெறவேண்டியுள்ள நியமனங்கள் தொடர்பில், உரிய வழிமுறைகளினூடாக உடனடியாகக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து துரிதமாக அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய சுற்றறிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட முடியாமல், நிரந்தர நியமனம் பெறத் தகுதியற்றவர்களாக ஏதேனும் ஊழியர்கள் இருப்பின், அவர்களைக் கைவிடாது, அவர்களது முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களுக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து ஆராயப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

Related Posts

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...

மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டு போட்டி- 2026!

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி- 2026!

by Bharathy
May 8, 2026
0

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின்...

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

by Bharathy
May 8, 2026
0

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய...

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

by Bharathy
May 8, 2026
0

அக்கரையங்குளம் காவல் எல்லைக்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் காவல் நிலையத்தில் ஹலோ...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வடிந்தோடல் சிக்கல்; விரைவில் தீர்வு காண நடவடிக்கை..!

by Bharathy
May 8, 2026
0

கரவெட்டி மத்திய பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் அமைப்பு மற்றும் வீதிப் புனரமைப்புப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாகத் NPP யின் கரவெட்டி பிரதேச சபை...

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

by Bharathy
May 8, 2026
0

மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி நகரில் நாவலப்பிட்டி கம்பளை வீதியிலும் பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில...

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வியட்நாம்...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!

by Bharathy
May 8, 2026
0

பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகினர். அவரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

by Bharathy
May 8, 2026
0

அரியாலை செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணியின் 11வது நாளான இன்று மே 08 ஆம் திகதி 3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன....

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையை உடனடியாக தீருங்கள்!

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையை உடனடியாக தீருங்கள்!

by Bharathy
May 8, 2026
0

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பலவீனம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் இடமாற்றத்தினால் வைத்தியசாலைச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவித்து, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுகாதார...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி