உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக ஒலிக்க வேண்டும்! – விஜய்க்கு கஜேந்திரகுமார் வாழ்த்து

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் தமிழக மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்துள்ளனர். குறிப்பாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் தமிழக உறவுகள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாகத் தங்களது தேச அங்கீகாரத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், எமது உரிமைப் போராட்டத்துக்குப் புதிய வலுவைத் தரும் என நாம் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் நீங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச அரங்கிலும், இந்திய மத்திய அரசிடமும் எமது நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்று எமது மக்களின் துயர்துடைக்க தமிழ்நாடு எவ்வாறெல்லாம் துணை நின்றதோ, அதேபோன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம்.

‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, எமது தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எமக்குண்டு.” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0