யாழில் சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரம்; சிக்கிய சந்தேகநபர்கள்.!
யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து இருபது கசிப்பு போத்தல்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத்தடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் அப்பகுதியில் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.