உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

முன்னாள் விமான சேவை தலைவர் பிணையில் விடுவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவர், இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.


நீதிமன்றில் ஆணைக்குழு அதிகாரிகள் சமர்ப்பித்த தகவல்களின் படி, 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


அமைச்சின் மூலம் ஏற்கனவே எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் மூலம் 28 இலட்சத்து 53 ஆயிரத்து 935 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆரம்பத்தில் மாதந்தோறும் 50,000ரூபாய் வழங்கப்பட்டதுடன், பின்னர் அது 75,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
எனினும், பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு இல்லை என ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரின் வெளிநாட்டு பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

34 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

31 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0