உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க உடனடி நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.


மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம். மாஹிர், மல்வத்தை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எல். குடாபடு மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது வைத்தியசாலையில் நிலவும் அத்தியாவசிய தேவைகள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் விஜயம் செய்த பணிப்பாளர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன், வைத்தியசாலை நிர்வாகம் முன்வைத்த முக்கியமான மற்றும் அவசர தேவைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


மேலும், குறைந்த வசதிகளுடனும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பான பணியையும் பணிப்பாளர் பாராட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

40 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0