உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஒரே பாலின சுற்றுலா திட்டம் தொடர்பான வழக்கில் சுற்றுலா அதிகாரசபையின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டங்களை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.


முன்னதாக, இவ்வகை சுற்றுலாத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்துக்கு கடிதம் வழங்கியிருந்தார். அந்தக் கடிதத்தை செல்லுபடியாகாதுஎன அறிவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இத்தகைய திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்ட விதிகளுக்கு முரணானவை என அவர்கள் வாதிட்டனர்.சுற்றுலா அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை என எடுத்துள்ள கொள்கை முடிவின் மூலம், இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைகளுக்கு தெளிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலதிகமாக பரிசீலனை செய்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0