“அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை முற்றாக குலைந்துவிட்டது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போர்ச் சூழல் குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகவும், இதனால் உலகளவில் பாரிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடி உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.போர் ஆரம்பமானதுமே நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் இரவு, பகல் என நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என சபையில் ஜனாதிபதி உறுதி அளித்திருந்ததை நினைவுகூர்ந்த அவர், நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்கூட்டியேசவால்களை வெளிப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்திருந்தால் பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்துடன் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறினார்.










