உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கையில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் புதிய வேலைத்திட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ்மா அதிபரின் அவசர அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை, அனைத்து தூதரகங்களுக்கும், அவற்றின் உத்தியோகபூர்வ அலுவலகங்களுக்கும் தொடர்ச்சியான பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயற்படும் விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.வெளிநாட்டவர்கள் தங்கியுள்ள விடுதிகள், குடியிருப்பு கட்டிடங்கள், பிரதான வர்த்தக நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.


தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து, தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்காக முப்படைகளின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0