உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதனை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உட்பட தேசிய நல்லிணக்கப் பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு செல்லவுள்ளது.

இதன்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஜெனிவா செல்வதற்கு முன்னர் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

மறுபுறம் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தால் வலியுறுத்தப்படும் மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசின் செயற்பாடுகள் உற்சாகமாக இல்லை. பெரும்பாலும் இந்தத் தேர்தலை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கவே அரசு ஆர்வம் காட்டி வருகின்றது.

தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல் கோரி தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்துக்குப் பல கடிதங்களை அனுப்பியுள்ளது என்றும், ஆனால் இதுவரை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ரீதியான தடைகள் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதி செயலகத்துக்குச் சுமார் நான்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் எதுவும் செய்ய முடியாது என்பதுடன், தேர்தல் குறித்த முடிவு தற்போது சட்டத் திருத்தங்களைச் சார்ந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதற்கு அரச பிரதிநிதிகளை நியமிக்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தனது நான்கு பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை நியமித்துள்ளது. இருப்பினும் அரசு இதுவரை தனது 12 பிரதிநிதிகளை பரிந்துரைக்கத் தவறியதால் தெரிவுக்குழு கூட முடியவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜெனிவாவில் அரசு தெளிவுபடுத்தவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0