• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மலையகத்தில் பாதுகாப்பான காணி பெற அரசுடன் இணைந்து செயற்பட நாம் தயார்.!

Mathavi by Mathavi
December 13, 2025
in இலங்கை செய்திகள்.
0
வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம்.!
Share on FacebookShare on Twitter

“மலைநாட்டில் இந்தப் பேரவலத்துக்குப் பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசில் அங்கம் வகிக்கும் மலையகப் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்படத் தயார்.” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

“நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்குப் பாதுகாப்பான வதிவிடக் காணிகளை அரசிடம் கோரி பெறுவோம.” – என்றும் மனோ கணேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது”-

“இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகின்றேன். ஏறக்குறைய பெரும்பாலான மலைப் பகுதிகளிலும் மலைப் பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்துள்ளன. இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன. இது இயற்கை அனர்த்தம். சிலர் கூறுவதைப் போன்று இவற்றைக் கொங்கிரீட் போட்டு ஒட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு.

மலைநாட்டில், மலை உச்சி, மண் சரிவு அபாயங்களை உடனடியாக எதிர்கொள்ளும் பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்களின் பிரச்சினை, சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப பிரச்சினை. இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்குப் பாதுகாப்பான வதிவிடக் காணிகளை அரசிடம் அவசரமாகக் கோருவோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி தோழர் அநுரகுமார திஸாநாயக்கவுடன் நான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடியுள்ளேன்.

பாதீட்டின் இறுதி நாளன்று, எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், ஜனாதிபதியின் உரையைச் செவிமடுத்தேன். இனிமேல் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே குடியமர்த்தப்படுவார்கள் என அவர் சபையில் தனது உரையில் கூறியதை நேரடியாகப் பாராட்டி, அதே அவகாசம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதன் பின், நமது எம்.பிக்களும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாகக் கருத்துக் கூறி ஜனாதிபதியின் கவனத்துக்குக் காணிப் பிரச்சினையை மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே, இன்று இது தேசிய பிரச்சினையாக மாறவுள்ளதை இனிமேல் எவரும் மறுக்க முடியாது.

பேரவலத்தை அடுத்து, நான் பல இடங்களுக்கு எனது கட்சிக் குழுவினருடன், நிவாரண பொருள் உதவிகளுடன், கண்காணிப்பு பயணங்கள் மேற்கொண்டேன். நான் போன பல இடங்களில், கண்டி நாவலபிட்டிய கங்க -இஹல – கோரள – அலுகொல்ல மலை உச்சி தோட்டம், மிகவும் ஆபத்து நிறைந்த பூமியாக என் மனதில் நிற்கின்றது. அங்கே அநாதரவாக இருந்த மக்களுக்கு, நாம் விநியோகித்த, உடனடி நிவாரணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தம் வாழ்விட பரிதாப நிலையை எனக்குக் கூறினார்கள். நான் அந்த மலை உச்சியில் மலையேறி நடக்கும் போதே, என் கால்களுக்குக் கீழே, தரை பிளந்து, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வருவதை என் கண்களால் கண்டேன். மீண்டும் ஒரு மழையோ, மண்சரிவோ வருமானால், கீழே உருண்டு வரத் தயாராக இருக்கும், பாறைகளையும், உயர்ந்த மண்மேடுகளையும் கண்டேன். இதை விட என்ன பரிதாபம் இருக்க முடியும்?

பாதுகாப்பான மாற்றுக் காணிகள் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதுவும் அவசரமாக முன்னுரிமை அடிப்படையில் நடைபெற வேண்டும். ஆகவே, அரசியல் கட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பேதங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டு, நமது சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூகப் பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்குப் பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம்.” – என்று மனோ கணேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 22, 2026
0

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

by Mathavi
June 22, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

by Mathavi
June 22, 2026
0

1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

by Mathavi
June 22, 2026
0

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

by Mathavi
June 22, 2026
0

நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற...

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் யாய 05, இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி