• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கொழும்பிலிருந்து தங்காலைக்கு கிளம்பிய மஹிந்த!

admin by admin
September 11, 2025
in இலங்கை செய்திகள்.
0
கொழும்பிலிருந்து தங்காலைக்கு கிளம்பிய மஹிந்த!
Share on FacebookShare on Twitter

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச வதிவிடத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) வெளியேறினார்.

இன்று பிற்பகல் அவர் வெளியேறும்போது, அந்தப் பகுதியில் மொட்டுக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஒன்றுகூடி இருந்தனர்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ வெளியேறுவதற்கு முன்னர் அவரை இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு வெளியேறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில் குடியேறவுள்ளார். அவரை அங்கு வரவேற்பதற்குரிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசு அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது.

எனினும், தனக்கு சட்டபூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது பற்றி பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளானது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று மஹிந்த வெளியேறினார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையே ராஜபக்ஷக்களின் பூர்வீகம், அரசியல் கோட்டை. அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் வெளியேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட மொட்டுக் கட்சி பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன, “செப்டெம்பர் 11 என்பது உலகில் பலம் பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.

பயங்கரவாதிகளிடம் இருந்து இலங்கையை பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் அநுரவுக்குப் பயந்தவர் அல்லர்” என்று குறிப்பிட்டார்.

மஹிந்தவின் அரசியல் பயணம்

🛑 1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட அவர், 23 ஆயிரத்து 103 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். நாடாளுமன்றத்துக்கு இளம் வயதில் (25) தெரிவான உறுப்பினர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

🛑 1977 இல் பொதுத்தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தார்.

🛑 1989 இல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கி, 13 ஆயிரத்து 73 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்கு மஹிந்த தெரிவானார்.

🛑 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த, 78 ஆயிரத்து 77 வாக்குகளுடன் சபைக்குத் தெரிவானார். இந்தத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டது.

🛑 1994 இல் சந்திரிகா தலைமையிலான அமைச்சரவையில் தொழில் அமைச்சுப் பதவி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டது. 1997 வரை அந்தப் பதவியில் அவர் நீடித்தார்.

🛑 1997 இல் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவி மஹிந்தவுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2001 வரை அந்தப் பதவியை அவர் வகித்தார்.

🛑 2001 இல் பொதுத் தேர்தலில் 109 ஆசனங்களை வென்று ஐ.தே.க. ஆட்சி அமைத்தது. அவ்வேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

🛑 2004 இல் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. சபைக்குத் தெரிவான மஹிந்தவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2002 முதல் 2004 வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

🛑 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த களமிறங்கினார். 48 இலட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

🛑 2010 ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது முறையும் மஹிந்த போட்டியிட்டார். 60 இ லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

🛑1978 அரசமைப்பின் பிரகாரம் நபர் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 18 ஆவது திருத்தச் சட்டம்மூலம் இந்த ஏற்பாட்டை மஹிந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாற்றினார்.

🛑 2015 இல் மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த போட்டியிட்டார். எனினும், அவரால் வெற்றி பெற முடியவில்லை.

🛑 2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு எதிரணி உறுப்பினராக வந்தார்.

🛑 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சியின் மஹிந்த பிரதமராகப் பதவியேற்றார்.

🛑 2018 டிசம்பர் 15 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த இராஜினாமா செய்தார்.

🛑 2018 டிசம்பர் 18 இல் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த நியமிக்கப்பட்டார்.

🛑 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து, நவம்பர் 21 ஆம் திகதி பிரதமராக மஹிந்த பதவியேற்றார்.

🛑2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளை மஹிந்த பெற்றார். அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

🛑 அரகலய போராட்டத்தால் 2022 மே 9 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை மஹிந்த விடுத்தார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த போட்டியிடவில்லை.

இந்நிலையில், அன்று அரசியலை ஆரம்பித்த இடத்துக்கே இன்று குடியேறுவதற்கு மஹிந்த சென்றுவிட்டார்.

எனினும், கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச வதிவிடத்தில் இருந்து மஹிந்த இன்று வெளியேறும் போது, “நான் அரசியலில் இருந்து விலகவில்லை” என்று அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.

Related Posts

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 22, 2026
0

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

by Mathavi
June 22, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

by Mathavi
June 22, 2026
0

1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

by Mathavi
June 22, 2026
0

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

by Mathavi
June 22, 2026
0

நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற...

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் யாய 05, இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி