இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் சுற்றில் 471 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் சுற்றில் 465 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனால் 6 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2 ஆவது சுற்றில் விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் சதத்தால் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கப்டன் ரிஷப் பண்டுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நடுவரின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதற்காக போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதமும், ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










