• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடக்கு, கிழக்கில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் ஆராய்ந்த பின்னர் முடிவு.!

Mathavi by Mathavi
May 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
வடக்கு, கிழக்கில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் ஆராய்ந்த பின்னர் முடிவு.!
Share on FacebookShare on Twitter

“வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும். இந்த மூன்று தேர்தல்களிலும் மக்களின் நடத்தை வேறுபட்டதாகவே காணப்படும். அந்தந்தத் தேர்தல்களுடனேயே ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒப்பிட்டு பார்ப்பதாயின் கடந்த தேர்தலில் 32 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்ட சஜித் பிரேமதாஸ இம்முறை 21 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கின்றார்.

சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளை இந்தத் தேர்தலில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது போயுள்ளது.

அவ்வாறெனில் அவர் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார் என மதிப்பிட முடியுமல்லவா? வரலாற்றில் தனியொரு கட்சி அதிகளவான சபைகளைக் கைப்பற்றியிருக்கின்றது. 266 சபைகளை அரசு கைப்பற்றியிருக்கின்றது. வரலாற்றில் எந்தவொரு கட்சியும் இவ்வாறான வெற்றியைப் பெற்றிருக்கவில்லை.

இவை தவிர மேலும் பல சபைகளை அமைப்பதற்கான வாய்ப்பும் அரசுக்குக் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவில்லை எனக் கூறப்படும் அகலவத்தை பிரதேச சபையில் 20 உறுப்பினர்களில் 6 தேசிய மக்கள் சக்தியும், 6 ஐக்கிய மக்கள் சக்தியும் பெற்றுள்ளன. இருவருக்கும் சபைகளை அமைப்பதற்கான வாய்ப்புள்ளது.

இவ்வாறு பல சபைகள் காணப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் தாம் போட்டியிட்ட தொகுதியில் கூடத் தோல்வியடைந்துள்ளார்.

சஜித் பிரேமதாஸ 14 சபைகளில் தமது தரப்பு வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவற்றில் ஒன்றில் கூட ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பின்றி அவர்களால் சபைகளை நிறுவ முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி தனித்து வெற்றி பெறவில்லை. ஆனால், அரசுக்கு 266 சபைகளை மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. அதிகபட்ச சபைகளை நிறுவுவதே அரசின் எதிர்பார்ப்பாகும். தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.” – என்றார்.

Related Posts

352 மில்லியன் ரூபா மதிப்புள்ள  ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன்
18 வயதுடைய வெளிநாட்டு யுவதி கைது!

by selvan
June 24, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சந்தை மதிப்புடைய சுமார் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வர...

தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!

தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!

by Mathavi
June 24, 2026
0

தமிழ்நாடு மாநிலத்தின் புதிய சமூக நீதித்துறை அமைச்சரும் நீண்டகால அரசியல் செயற்பாட்டாளருமான வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

டெங்கு காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு.!

டெங்கு காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு.!

by Mathavi
June 24, 2026
0

ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாகத் துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வாருங்கள்.!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வாருங்கள்.!

by Mathavi
June 24, 2026
0

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கத் தயாராக உள்ளார்...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும்...

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.!

by Mathavi
June 24, 2026
0

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று...

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; பேருந்து விபத்து.!

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; பேருந்து விபத்து.!

by Mathavi
June 24, 2026
0

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர்...

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 24, 2026
0

கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில்...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி பாதசாரி உயிரிழப்பு.!

by Mathavi
June 24, 2026
0

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் - குருநாகல் வீதியில், புத்தளம் நகருக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வாழ்த்து.!

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வாழ்த்து.!

by Mathavi
June 24, 2026
0

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி