அடுத்தவரின் வாழ்முறையை
கட்டுப்படுத்துவதில் சாதித்ததாகப்
பெருமை கொள்கிறாய்
தனி மனித சுதந்திரத்தை
உனக்காக விட்டுக்கொடுத்ததை
எண்ணி பெருமை கொண்டு
அடுத்தவரின் மனோநிலையில்
இருந்து பார்க்கத் தவறுகிறாய்
ஒருவரின் விட்டுக்கொடுப்பு
உனது சுயநலனின் வெற்றி
என்பதை உணர மறுக்கிறாய்
உனது சாதிப்புகள்
அடுத்தவரை பாதிப்பதை
எப்போதும் நீ நினைப்பதில்லை
சில தனி மனித விருப்புகள்
சில தனி மனித தனித்துவத்தின்
இழப்பு என்பதே யதார்த்தமாக
சொந்த நலனின் பக்கப்
பார்வைகளும் விருப்புகளுமே
நியாயமாகச் சொல்வதில்
தனது வெற்றியை
இன்னொருவரின் தோல்வியாகப்
பார்த்தல் எப்படிச் சாத்தியம்….
அ . ஜெகன்
சுவிஸ்
Related Posts
குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலை தொடர்பான தொல்லியல் மற்றும் வரலாற்று விவகாரம், வெறும் மத அடையாளமாக மட்டுமன்றி, ஒரு தேசிய இனத்தின் பூர்வீக அடையாளச் சிக்கலாகவும்...
தமிழ்ப் பெயர்கள்!
சிறிதளவேனும் வேற்று மொழிகளின் கலப்படமின்றி ஆரம்பகால தமிழர்கள் தமது குழந்தைச் செல்வங்களுக்கு ஆகச் செறிந்த கருத்து பொதிந்த தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில்...
வாசலிலே கிருசாந்தி!
எழுபது ஆண்டு கால தாகத்தில் எண்ணற்ற அழிவுகளும், சிதைவுகளும் தமிழினத்தின் மேல் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் பெற்ற சுதந்திரம் தமிழர்களுக்கு மட்டும் நஞ்சாக மாறியது ஏனோ....
பாகல் துளிர்!
முதன் முதலில் எனது கவிதை ஒன்று நூலுருவாக்கம் கண்டது எனது பாடசாலை மூலமாகவேதான். முதலாம் ஆண்டு தொடக்கம் பதினொராம் ஆண்டு வரை கற்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி...
அகராதி கவிதைகள்!
ஒரு சில சொற்களை கொண்டு கருத்தின் தொன்மைக்கு அழைக்கும் கவிதை பாணி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் பிடிக்கும். சொற்களை, கருத்துக்களை அடுக்காமல் ஒரே புள்ளியில் நெத்தியடியாக...
ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!
வெறுமனே வார்த்தையோடு முடிகின்ற சொற்பதமாக இல்லாது பெரும் உயிரோட்டமாக இறுக்கப்பற்றுகிற நாமமாகவே ஈழத்தமிழர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் விளங்குகிறது. தமிழ்த் தேசியம் என்பது வெள்ளையர்களின் வெளியேறுகைக்கு பிறகு...
தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!
இந்நூலினுடைய தலைப்பானது மிக ஆழமானது என்பதனை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. ஈழத்து தமிழர்களுடைய அரசியல் விடுதலை என்பது தமிழ்த் தேசியம் என்பதாகும். இந்தத் தமிழ்த் தேசியம் என்ற...
பால காண்டம்!
அண்ணன் முத்துக்குமார் அவர்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் எவரின் உள்ளத்தை விட்டும் இன்றும் பிரியவில்லை. அவர் கவிதை மேல் கொண்டுள்ள காதல் காலத்தை வென்று ஓங்கி ஒலித்துக்...
தோட்டுப்பாய் மூத்தம்மா!
நூல் :- தோட்டுப்பாய் மூத்தம்மாஎழுத்தாளர் :- பாலமுனை பாறுக்விலை :- 200ரூபா ஐயா பாலமுனை பாறுக் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது என நினைக்குறேன். ஈழத்து...
புலரி..!
நூல்:- புலரிஎழுத்தாளர்:- கல்யாண்ஜிவிலை:- ரூபாய். 450 தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு தாயின் கருவில் இருந்து பூமித்தாயின் கரங்களுக்கு பிண்டமாக பிதுங்கிய அசையாத உருவமே சில...










