தெற்கு அதிவேக வீதியில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தின் போது பேருந்தின் சாரதிக்கும் பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
