யாழ் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 17உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் எதிர்வரும் 04.04.2025 அன்று மாலை 2மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நாளையதினம் (29.03.2025) குறித்த கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் நீண்டகால நிர்வாக செயலாளருமான திரு.சூ.சே.குலநாயகம் அவர்களின் ஏகபுதல்வியான சட்டத்தரணி ஆன் குலநாயகம் அவர்களின் திடீர் மறைவு காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT