கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை – திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தேடப்படும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் குறித்து இந்த சந்தேக நபர் தமது தொலைபேசி ஊடாக காவல்துறையினருக்குப் போலியான தகவல்களை வழங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் தேடப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.