2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக இரணைமடுக் குளத்தின் நீர் இன்று சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது.
காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
பயிர்ச்செய்கைக்குழு தீர்மானத்தின் படி 2025 சிறுபோகத்தில் 19164 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 382 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




