ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையானார்.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் செய்த எயார் பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
இந்தநிலையில், அவர் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்.