பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாப்பரசர் பிரான்சிஸ், நிமோனியா பாதித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்நேற்று (24) மாலை முதல் வத்திக்கான் நினைவுச்சின்ன சதுக்கத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மிகவும் குளிரான மற்றும் மழை கொட்டும் இரவையும் பொருட்படுத்தாமல், பாப்பரசர் பிரான்சிஸ் குணமடைய வேண்டு ம் என்று பிரார்த்தனை செய்தனர்.
வத்திக்கான் நினைவுச்சின்ன சதுக்கத்தில் கூடியிருந்த மக்களின் மனநிலை பெரும்பாலும் சோகமாகவே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.