பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச்சென்ற கைதிகள் நால்வரும் 29 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர்.
கைதிகள் நால்வரும் போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.