உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் அவருடைய 85 வயதில் உடல்நலக் குறைவால் இன்று புதன்கிழமை (12) காலமானார்.
அண்மையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் சத்யேந்திர தாஸ் பின்னர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழக (SGPGI) மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவர் காலமானதாக அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.