பாகிஸ்தானில் பொலிஸ் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததோடு 5 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக்கில் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் மீது இன்று(06) அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 3 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 5 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேரும் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தக் தீவிரவாதக் குழுவும் பெறுப்பேற்கவில்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதக்குழுக்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.