கழிவுகள் அற்ற தேசத்தினை உருவாக்கும் செயற்திட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படடது.
பேம் நிறுவனத்தினை வவுனியா மாவட்டத்தில் பங்காளர் நிறுவனமாகக் கொண்ட கொமன் கிரவுண்ட் சர்வதேச நிறுவனத்தின் அமுல்படுத்தலில் பிரிட்டி கவுன்சில் ஐரோப்பிய நிறுவனத்தின் சீடள் திட்டத்தில் மாற்று வழியில் பிணக்குகளை தீர்க்கும் மன்ற உறுப்பினர்களால் கழிவுகள் அற்ற கிராமத்தினை உருவாக்குவோம் என்ற எண்ணக் கருவில் வீதியில் கழிவுகள் அகற்றி வவுனியா மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கான நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
சுமுகமான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் கழிவுகள் அற்ற கிராமத்தினை உருவாக்குவோம் என்ற சிந்தனையின் கீழ் வீதியில் உள்ள கழிவுகளை அகற்றி வவுனியா மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கான கழிவு முகாமைத்துவம் செய்யும் திட்டத்தின் ஒரு கட்டமாக இறம்பைக்குளம் ஹொரப்பொத்தானை பிரதான வீதியின் அருகில் விழிப்புணர்வு பதாதை இடப்பட்டது.
வவுனியா மாவட்ட பேம் நிறுவனத்தின் பணிப்பாளரும், திட்டமிடல் முகாமையாளருமான எஸ்.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நகரசபை செயலாளர் மற்றும் மாற்று வழியில் பிணக்குகளை தீர்க்கும் மன்ற அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
![](https://thinakaran.com/storage/2025/02/SSSSSS.jpg)