வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் மூளை நரம்பு வெடித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. நான் சொல்வது தவறாக இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருக்கின்றேன். அந்த இருவரும் ஏன் சென்றீர்கள் என்ன கதைத்தீர்கள் என்பதை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
தேசியப் பட்டியல் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு கொடுத்திருக்கப்பட வேண்டும். கொடுத்திருந்தால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தலைவர் விட்ட பாதையில் ஒரு தமிழர் அணியை செயற்படுத்தி இருப்பார். அது தான் அவரது நோக்கமாகவும் இருந்தது. யாரையும் கட்சியை விட்டு கலைக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. போனவர்களையும் மீள இணைத்து தேசிய அமைப்பாக தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் அவரது முயற்சி துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டது. பண்டார வன்னியன் காக்கை வன்னியனால தோற்கடிக்கப்பட்டது போல் மாவை சேனாதிராஜா நவீன காக்கை வன்னியர்களால் தோற்கடிக்கப்பட்டார் என்பது தான் உண்மை.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேசியப் பட்டியல் இணைக்கபட வேண்டும். அது தவறினால் தேசியப் பட்டியல் நேரடியாக தேர்தல் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இது இரண்டும் செய்யப்படவில்லை அது ஈமொயில் அனுப்பப்ட்டதாக கல்வி மான்களும், அதற்கு பொறுப்பானவர்களும் சொல்கிறார்கள். பட்டியல் அனுப்பியிருந்தால் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா அவர்களின் பெயர் இருந்தது. தாங்கள் தோற்று விட்டால் அதனை தாங்கள் எடுப்பதற்காக சூழ்ச்சி செய்துள்ளார்கள். இந்த பற்றிய நடைமுறைகள் அவர்களுக்கு தெரியாதா.
இது திட்டமட்டு செய்யப்பட்ட சதி. அந்த சதி மூலம் அந்த தேசியப் பட்டியலை தாங்கள் எடுத்துள்ளார்கள். தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. வன்னியில் மூன்று மாவட்டங்கள் உள்ளது. வவுனியாவில் நேரடியாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த வாக்கு 406. ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒன்று கூட விழவில்லை. அப்படியான ஒருவர் தான் தேசியப்பட்டியல் எடுத்துள்ளார். இது ஒரு சூழ்ச்சி. யாருடைய வழிகாட்டலில் இதை எடுத்துள்ளார்கள என அறிய வேண்டும். இந்த நிகழ்ச்சி நிரலின் பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாது.
தமிழரசுக் கட்சியை மீட்டு எடுக்க வேண்டுமாக இருந்தால் பதில், பதில், பதில் என்கின்ற மும்மூர்த்திகள் தங்களது பதவிளை விட்டு பதவி விலக வேண்டும். தமிழரசுக் கட்சியை சுமுகமாக இயங்க வழி விடவேண்டும். பொதுக் குழுவை தடை செய்த வழக்கை பின்வாங்கிக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் வாக்குறுதி வழங்கியது போன்று நிபந்தனையின்றி வழக்கை மீளப் பெற வேண்டும். இன்று நிபந்தனகளை வைத்துள்ளார்கள். தமிழரசுக கட்சியை மீடடெக்க உதவ வேண்டும் என்பது தான் என்னுடைய அவா. அதுவே மாவை சேனாதிராஜா அவர்களின் ஆத்ம சாந்தியடைய வழிவகுக்கும். அல்லது தமிழரசுக்கட்சி உருக்குலைந்து விடும் என்பதே எங்களது ஆதங்கம் எனத் தெரிவிதார்.
: