கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (01) திருகோணமலை ஆளுநர் செயலகத்தின் முன்னால் உள்ள கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த கரையோர பகுதி சிரமதான நிகழ்வாக இடம்பெற்றது.
இதில் கடற்கரையோரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சூழல் மாசடையாத வண்ணம் சுத்தம் செய்யப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் என அனைத்தும் அகற்றப்பட்டன.
இதில் ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ் அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ எம் ஜி ஹேமந்த குமார உட்பட மாகாண சபைக்குடபட்ட திதிணைக்களத்தின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.