இந்தியா மதுரையில் இடம்பெற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்திற்கு முன்னால் இடம்பொற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சிவலீமன் சிலம்ப கழக மாணவர்களும், பாபு இஷின் ரியூ கராத்தே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கிய 20 பேர் கொண்ட குழு இந்தியா மதுரையில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் பங்குபற்றினர்.
போட்டியில் பங்கு பற்றிய வடக்கு மாணவர்கள் 36 முதல் பரிசுகளையும், 08 இரண்டாவது பரிசுகளையும், 05 மூன்றாவது பரிசுகளையும் பெற்றதோடு 95 கேடயங்களை தம்வசமாக்கினர்.
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் இன்று புதன்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.




