வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27) திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வை.எம்.எம்.ஏ நிறுவனத்தின் மாவட்டப் பணிப்பாளர் எம். எம். முக்தார் தலமையில் இடம்பெற்றது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் புதிய கல்வி ஆண்டில் பாடசாலைக்குச் சென்று தங்களது கற்றல் செயற்பாடுகளை மகிழ்ச்சியாகவும் தங்கு தடையின்றியும் மேற்கொள்ளும் நோக்குடன் ”அனைவருக்கும் கல்வி மகிழ்ச்சியான எதிர்காலம்…” எனும் தொனிப்பொருளின் கீழ் சுமார் 75 ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிரேஸ்ட ஆசிரியர்களான எம். ரீ.எம். பாரிஸ், திருமதி குசைனா இக்பால், திருமதி ஏ. எஸ் சம்ரூத் பேகம், ஓய்வு நிலை அதிபர் எம். பரீட் உட்பட வை.எம.எம்.ஏ கிளை நிர்வாகிகள், பெற்றேர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.