நெல் கொள்வனவில் நடைபெரும் மோசடிகள் தொடர்பாக அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தைப்பகுதி மற்றும் பரந்தன், கண்டாவளை போன்ற பகுதிகளில் இன்றையதினம் 28/01/2025 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மற்றும் அரச அனுமதியற்ற தராசுகள் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும் நெல் கொள்வனவின் போது அரச அனுமதியற்ற தராசைப் பயன்படுத்தி மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டதோடு
அளவீட்டு அலகுகள் திணைக்கள அதிகாரிகளால் கிளிநொச்சி பொலீசாரின் உதவியுடன் அனுமதியற்ற தராசுகள் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன் உரிய நடவடிக்கைகளும் மோசடிக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன.