இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் விழுந்ததில் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.