வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பதை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு தற்போது நிரூபித்து வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
“அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குகே கையேந்தும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
மாற்றம் என்று கூறி வந்த இந்த அரசு, வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகின்றது.
தேர்தல் காலங்களில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பதை அநுர அரசு தற்போது நிரூபித்து வருகின்றது.
இந்த அரசு பாதை தவறிப் பயணிக்கின்றது என்பதே உண்மை. பாதை தவறிப் பயணித்த கோட்டா அரசுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை அநுர அரசு நினைவில்கொள்ள வேண்டும்.” – என்றார்.