இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம், கண்டாவளை ஆகிய பகுதிகளில் அறுவடை நடைபெற்று வந்தது.
வெள்ளம் காரணமாக எஞ்சி இருந்த நெற்கதிர்கள் மற்றும் வயல் நிலங்களும் முற்று முழுதாக அழிவடைந்துள்ளதுடன் குளங்களில் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதலைகளும் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் வீட்டிலோ அல்லது வெளியில் செல்வோர் தனிமையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கூறுகையில், வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் குறுக்கறுத்து பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே இவ்வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளதாகவும் இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.