யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற உந்துருளி ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும், உந்துருளி ஓட்டுனரும் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இருவரும் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றபட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற உந்துருளி ஓட்டுநரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
உந்துருளி ஓட்டுனரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.