யாழ்ப்பாணத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்றைய தினம் புதன்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரியில் நடைபெற்றது.
இலங்கைக் கடற்படையின் சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடனும், குட் நெய்பர்ஸ் பவுண்டேசனின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
குறித்த பல் சிகிச்சை முகாமில் நடேஸ்வர கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அப்பகுதியை சேர்ந்த மக்கள் என பலரும் தமது பற்களை பரிசோதித்து, வைத்திய ஆலோசனைகள் மற்றும் ஆரம்ப சிகிச்சை என்பவற்றை பெற்றுக்கொண்டனர்.