இச் சம்பவம் இன்று இரவு 9 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் இடம் பெற்று உள்ளது.
இத் தீ பரவலின் போது நான்கு குடியிருப்பு பகுதியில் உள்ள கூறைகள் எரிந்து உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
ஏனைய 12 குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தோட்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸார் தடுத்து போராடி நிறுத்தி உள்ளனர்.
16 குடியிருப்பு கொண்ட தொடர் குடியிருப்பில் முதல் நான்கு குடியிருப்பு பகுதியில் உள்ள கூறைகள் சேதமடைந்து உள்ளது.
அந்த 16 குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.