பெந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் மதிய உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை, தவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த இனுரா எவுமன் என்ற 7 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் , இன்று பாடசாலைக்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.