ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் அனுசரணையில் இடம்பெற்ற பொங்கல்(14) நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
யாழ்.வடமராட்சி புனிதநகர் புரட்சி முன்பள்ளியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் அனுசரணையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வானது காலை 10.00 மணிக்கு பொங்கல் பானை ஏற்றும் வைபவத்துடன் ஆரம்பமாகி முன்பள்ளி சிறார்கள், முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டு அவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வுடன் நிறைவடைந்தது.
குறித்த நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் போராளி சி.வேந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.