ஏரிசி (ATC) கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று 1985 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் ATC கல்வி நிறுவனத்தில் இடம் பெற்றது.
ATC கல்வி நிறுவனத்தில் 1985 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மாணவர்கள் இணைந்து தமது 56ஆவது அகவையை முன்னிட்டு குறித்த பொங்கல் பொதிகளை வழங்கினர்.