பொரளை மெகசீன் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது தப்பியோடி ஒளிந்திருந்த கைதி ஒருவர் நேற்று (10) கைதுசெய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
43 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர்குண்டு வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஒகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதி பொரளை மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சிறைக் கைதியை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக சிறைச்சாலை பஸ் மூலம் அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்றுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.