நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் மாநாடு தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் 60 நாடுகளிலிருந்தும் 17 மாநிலங்களில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் விசேட அழைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளார்கள்.