மலையக தியாகிகள் தினம் மற்றும் 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொ லை நினைவேந்தல் ஆகியன இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலானது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் அரங்கேற்றப்பட்ட படு கொ லைகளால் தமிழ் மக்கள் இனப் படுகொ லை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்றுவரையில் படுகொ லை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே நீள்கின்றது.
அத்துடன் தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்தவர்களை நினைவேந்தும் முகமாக இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.