இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (10) அறிவித்துள்ளார்.
35 வயதான வருண் ஆரோன் 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளிலும் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது முழுமையாக அனைத்துவிதமான போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதை அறிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.