2024 ஆம் ஆண்டில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு (MeitY) இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல முயற்சிகளை முன்னெடுத்தது. செயற்கை நுண்ணறிவு (AI), குறைகடத்தி உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது, உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும், பரிமாற்றக் கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் என்பன அதில் அடங்கும்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் தகவலின் பிரகாரம், இந்திய குறைகடத்தித் திட்டத்தின் கீழ், பல குறிப்பிடத்தக்க திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இது உலகளாவிய குறைக்கடத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
டாட்டா இலத்திரனியல் தனியார் நிறுவனம் (TEPL) தாய்வானின் PSMC நிறுவனத்துடன் உடன் இணைந்து 91,526 கோடி(இந்திய ரூபா) முதலீட்டில் குறைகடத்தி வசதியை அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு பொதியிடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாளாந்தம் 48 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, முன்னெடுக்க உள்ள ரூ.27,120 கோடி முதலீட்டுத் திட்டத்திற்கான அங்கீகாரத்தை TEPL நிறுவனம் பெற்றுள்ளது.
மற்றொரு நிறுவனமான சிஜீ பவர் என்ட் கைத்தொழில் தீர்வு நிறுவனம் , உலகளாவிய பங்காளிகளுடன் கூட்டு முயற்சியில், 15.07 மில்லியன் அலகு நாளாந்த உற்பத்தி திறன் கொண்ட ரூ.7,584 கோடி மதிப்பிலான மற்றொரு திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது. கெய்ன்ஸ் தொழில்நுட்ப இந்திய லிமிடெட் (KTIL) நாளாந்தம் 6.33 மில்லியன் சிப் உற்பத்தியை இலக்காகக் கொண்டு, குஜராத்தில் ரூ.3,307 கோடி முதலீட்டில் திறந்த மூல பொருத்த தொழில்நுட்பம் (OSAT) வசதியை அளிக்க அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்தி, உள்நாட்டு ரோபாட்டிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்காக அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் (GPAI) தலைமை பதவியை இந்தியா வகிக்கிறது. 6 ஆவது GPAI அமைச்சர்கள் மட்ட கூட்டத்தை அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது.
மாற்றியமைக்கப்பட்ட இலத்திரனியல் உற்பத்தி கிளஸ்டர்கள் (EMC 2.0) திட்டம் பல மாநிலங்களில் உள்ள திட்டங்களுடன் இணைந்து துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தெலுங்கானாவில் உள்ள திவ்டிபல்லியில் இது சார்ந்த திட்டத்திற்க ரூ.10,574 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டம் 19,164 தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு ரூ.8,737 கோடி முதலீடு செய்யப்பட இருப்பதோடு 36,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவின் மைசூருவில் ரூ.1,560 கோடி முதலீடு செய்யப்பட இருப்பதோடு 19,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
ஆறு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தின் கீழ் 6.39 கோடி நபர்களுக்கு 2024 இல் வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டது.