வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கனகராயன்குளம் தெற்கு அபிவிருத்தி சங்கத்தின் காணியை பொலிஸாரின் பாவனையில் இருந்து விடுவித்தல், பொருளாதார மத்திய நிலையத்தைத் திறப்பது உட்பட பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய தீர்மானங்களும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், து.ரவிகரன், முத்து முகமது மற்றும் மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரச அதிபர் திரேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.