கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்களின் வினைத்திறணை மேம்படுத்தும் பொருட்டு கிழக்கு முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் N. M. நெளபீஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு நூலக சேவைகளை மேம்படுத்தல் பயிற்சி நெறியானது திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் விரிவுரை மண்டபத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது.
இப் பயிற்சி நெறிக்கு வளவாளராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட்ட உதவி நூலகர் N. M.ரவிக்குமார் கடமையாற்றினார்,
நிகழ்வில் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் பயிற்சி உத்தியோகத்தர் மு. கா. ஸ்ரீரிதர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.